09.09.09 இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைப்பு : புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு

சென்னை : ""புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு (09.09.09) 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைக்கப்படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு 9 மணிக்கு சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்படும் ரிப்பன் கட்டடத்தில் இருந்து, என் தலைமையில் நகரில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். 9 நிமிடங்கள் கழித்து, மறுபடியும் விளக்குகள் ஒளியூட்டப்படும்.இந்த நிகழ்ச்சியில் 99999 என் பதைக் குறிக்கும் வகையில் நகரில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 99 வல்லுனர்கள் கலந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து உரையாற்றுவர்.ஒரு நாள் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைப்பதால், பூமி குளிர்ந்துவிடப்போவதில்லை. புவி வெப்பமயமாதல் குறித்த செய்தி, மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் விளக்குகள் அணைக்கப்படும்.

அந்த சமயத்தில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படும். அதற்கான சுற்றறிக்கை, கமிஷனர் மூலம் அனுப்பப்படும். நகரில் உள்ள சாலை ஓர பூங்காக்கள். சாலை திட்டு பூங்காக்கள், மற்றும் பூங்காக்களில் விளக்குகள் அணைக்கப்படும்இதற்காக பல துறைகளைச் சார்ந்தவர்கள், அவர்களது துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் அவர்களது சார்பு குடும்பத் தினர் உட்பட பல்வேறு சமூக அமைப் பினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இவ்வாறு மேயர் கூறினார்.

0 comments:

Post a Comment

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates