தகவல் உரிமை சட்ட பயன்பாடு: முதலிடத்தில் தமிழர்கள்

"தேசிய அளவில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில், தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்' என, மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

கடந்த 2006 ஜனவரி முதல், நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள், தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில், 22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை; 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இச்சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு, தமிழர்களிடையே இச்சட்டம் தொடர்பாக உள்ள விழிப்புணர்வே காரணம். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி, அனுப்பினால் போதுமானது. கருவூலத்தில் செலுத்தப்பட்ட சலான், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெருமாள்சாமி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates